'தடம்' அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓர் அரசு சாரா நிறுவனமாகும். எங்கள் கவனம் இங்கு வாழும் தமிழ் சமூகத்தின் மன ஆரோக்கியத்தில் உள்ளது.
தமிழில் பயணம் என்ற சொர் பதத்தை 'தடம்' என்று குறியிடலாம். நம் ஒவ்வொருவரின் தடமும் வேறுபட்டவை. நாம் தனித்தோ அல்லது நமது குடும்பங்கள், நண்பர்களுடன் இணைந்தோ நமது தடங்களை பதித்திருக்கலாம். எந்த வகையை நாம் தேர்ந்து எடுத்திருந்தாலும் நமது வாழ்வின் பயணங்கள் நீண்டவைகளாவும், நெளிவு சுளிவுகள் நிறைந்தும், பல சவால்கள் உடையனவாகவும், மிகவும் கடினமாகவும் இருந்திருக்கலாம்.
'தடம்' மனநலம் பற்றிய கலந்துரையாடல்களை இயல்பாக்கி உதவிகள் தேடும் வழிமுறைகளை சுலபமாக்கி உதவிதேவைப்படுவோற்க்கு உதவிகள் செய்து ஓர் நேர்மறையான மாற்றத்தை எங்கள் சமூகத்தில் ஏற்படுத்துதை நோக்கமாக கொண்டுள்ளது.