மௌனத்தில் பயணங்கள்
மௌனத்தில் பயணங்கள்
மௌனத்தில் பயணங்கள் மகத்தானவை!
அத்தனையும் மனதின் பயணங்களே!
ஆடலின்றி பாடலின்றி
அலுப்பின்றி சலிப்பின்றி
நடந்தன மனதின் நடனங்கள்!
ஓர் இனமாய் ஓர் மனமாய்
பயணித்தோம் அமைதிக்காய்
மனதின் அமைதிக்காய்!
மன நலனின் தேடுதல்கள் மகத்தானவை!
நடக்கின்றோம்...
மீண்டும் மீண்டும் மனநலனின் தேடுதல்கள்....
என் பயணம்
உன் பயணம்
நம் பயணம்
அத்தனையும் நலனுக்கே!
மனதின் நலனுக்கே!